மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்
02-Aug-2025
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஓ., க்கள் மீராகோமதி, பாபு, டாக்டர் அறிவொளி, வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஜெகன்நாதன், துணை தாசில்தார் சேகர், தேன்மொழி, ஆசைமுத்து, அருணாச்சலம், கிருஷ்ணன், ஏழுமலை, சசிகுமார், தினகரன், அன்பழகன், சத்யராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் செம்மேடு, கருக்கை, மேலிருப்பு உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் 15 துறைகளின் கீழ் 45 சேவை தொடர்பான கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
02-Aug-2025