மேலும் செய்திகள்
மகளிர் உரிமை தொகை 512 மனு
02-Aug-2025
நெய்வேலி : நெய்வேலி அடுத்த மேல் வடக்குத்து, கண்ணுத்தோப்பு, கீழ் வடக்குத்து, சந்தைவெளிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகை யில், சந்தைவெளிப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளி யில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. முகாமை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை, இலவச மனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லம். மின்சார இணைப்பு, மருத்துவ காப்பீட்டு அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை மனுக்களாக அளித்தனர். பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், தாசில்தார் விஜய் ஆனந்த், டாக்டர் அகல்யா, வடக்குத்து ஊராட்சி செயலாளர் சிவகுமார், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன். அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், ராம வெங்கடேசன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, கல்யாணசுந்தரம், மாவட்ட மருத்துவர் அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் பாக்யராஜ் லோகநாதன், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அ ணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம், மோகன்ராஜ், கோவிந்தன் ,அழகேசன், பூபதி, பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Aug-2025