உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில், நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, கடலுார் மருத்துவ கல்லுாரி முதல்வர் திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்மாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் வரவேற்றார். மருத்துவ முகாமில் 25 க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர். பொது மருத்துவம், அறுவை சிகிச்சை , எலும்பு முறிவு, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், நீரழிவுக்கான நோய், தோல், கண் சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 1337 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. விவேகானந்த பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் ஆசைதம்பி, பி.டி.ஒ., ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !