மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்த நாள் அரசியல் கட்சிகள் மரியாதை
16-Sep-2024
கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நலச்சங்க இரண்டாவது மாநில மாநாடு மற்றும் வெள்ளி விழா நடந்தது.மாநில தலைவர் ராசமோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் மோகன், திருமுருகன், துணை செயலாளர்கள் காமராஜ், சுந்தரம் முன்னிலை வகித்தனர்.மாநில சட்ட இயக்குநர் முருகன் சங்க கொடி ஏற்றினார். மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் பார்த்திபன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.சங்க மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட நிர்வாக இயக்குநர் மற்றும் சமூக நலத்துறை சமரசக்குழு உறுப்பினர் அமுதவல்லி, பெட்காட் மாநில தலைவர் முருகன், மாநில துணை செயலாளர் ஆனந்தஜோதி, மகளிரணி செயலாளர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் நுகர்வோர் சேவைகள் குறித்து பேசினர்.அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ராஜி ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.கூட்டத்தில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துறைவாரியாக நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில் மூத்த குடிமக்கள் பயன்படுத்த லிப்ட் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் அன்பு, சிந்துசுப்ரமணியன், சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
16-Sep-2024