மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
02-Sep-2025
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேதிப் பொறியியல் துறையில் 'ஐ.ஈ.ஐ., மாணவர் அத்தியாயம்' துவக்க விழா நடந்தது. இந்திய பொறியியலாளர் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பொறியியல் புல தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் பேராசிரியர் சரவணன் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, தைசென்கரூப் நியூசெரா நிறுவன முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியநாதன் பேசினர். கடந்த கல்வியாண்டின் செயல்பாடு குறித்து, மாணவி அமிர்தா தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் வாழ்த்திப் பேசினார். பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பேராசிரியர் முல்லை நன்றி கூறினார்.
02-Sep-2025