உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் விடுதி அடிக்கல் நாட்டு விழா

மாணவர்கள் விடுதி அடிக்கல் நாட்டு விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.சேத்தியாத்தோப்பில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் 200 பேர் தங்கும் வகையில், 2 கோடி ரூபாய் செலவில், மூன்று தளங்களுடன் விடுதி கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். ஒப்பந்ததாரர் சிவக்குமார், விடுதி வார்டன் ஸ்ரீதர், கவுன்சிலர் செந்தில், கலைவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !