உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கவனிப்புக்கு தகுந்தாற்போல சார் பதிவாளர் பணி மாறுதல்

கவனிப்புக்கு தகுந்தாற்போல சார் பதிவாளர் பணி மாறுதல்

விருத்தாசலம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகம் கடந்த 1909ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதன் மூலம் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பத்திரப் பதிவுகளை செய்து வருகின்றனர். பழமையான கட்டடத்தை இடித்து அகற்றி, சமீபத்தில் 1.87 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.ஆனால், இரண்டு மாதங்களாகியும் இதுநாள் வரை நிரந்தரமாக சார் பதிவாளர் நியமிக்கப்படவில்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பொறுப்பு அதிகாரி ஒருவர் வந்து செல்வதால், ஏராளமான பத்திரங்கள் பதிவு செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றனர்.அதிலும் பத்திரத்தின் தன்மைக்கு தகுந்தாற்போல கவனிப்பு அதிகமாக இருந்தால் விடுமுறை இல்லாமல் பணிக்கு வருவதாகவும், மற்ற நேரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே பொறுப்பு அதிகாரிகள் வந்து செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதிதாக கட்டி திறக்கப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் படங்கள் மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே இருந்த தேசிய தலைவர்களின் படங்கள் இல்லை எனக் கூறி அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.வருங்காலத்தில் நிரந்தரமாக அதிகாரியை நியமித்தால் பதிவுகளும் தேங்காது; அலுவலக பிரச்னைகளும் சரி செய்யப்படும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி