திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
கடலுார்,: மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் முன்பு வரை கடும் வெயில் தாக்கம் இருந்தது. அதிகபட்சமாக, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக 100 டிகிரி வெப்பம் பதிவாகியது. அதனால் கடலில் காற்று சுழற்சி ஏற்பட்டது. இந்த சுழற்சி கரையை நோக்கி நகர்வதால் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.அதன்படி நேற்று காலை கடலுார் மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த மழை மேகம் உள்ள இடங்களில் மட்டும் பெய்தது, மற்ற இடங்களில் வெயில் அடித்தது, ஒரு சாலையில் கனமழை, அருகில் உள்ள சாலையில் வெப்பம் என மாறி மாறி பெய்தது. மழை பெய்துள்ள இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. அதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.