உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.வி.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை

எஸ்.வி.எஸ்., அகாடமி மாணவர்கள் சாதனை

பண்ருட்டி : வடலுார் எஸ்.வி.எஸ்., அகாடமி மாணவர்கள் குறு வட்ட அளவிலான போட்டிகளில் வென்ற சாதனை படைத்தனர். நெய்வேலி பாரதி விளையாட்டரங்கில் குறுவட்ட அளவில் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில், வடலுார் அடுத்த காட்டுக்கொல்லை எஸ்.வி.எஸ்., அகாடமியில் பயிற்சி பெறும் வடலுார் எஸ்.டி ஈடன் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 14 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் தடகளம், சிலம்பம் போட்டியில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என, மொத்தம் 18 பதக்கம் பெற்றனர். போட்டியில் வென்ற கார்ல் ரிச், பத்மசரண், ஜோஸ்வா, புகழேந்தி, அருளரசி, ஷியாம் கணேஷ், கிரித்திஷ், ரித்தீஷ்வரன், ராஜரிஷி, அருணைவேந்தன், கிஷோர், பத்மப்ரியா, அஹானா எலிஸ் ஆகியோரை எஸ்.வி.எஸ்., அகாடமி பயிற்சியாளர் செல்வராஜ் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை