முதியோர் இல்லத்தில் இனிப்பு வழக்கல்
சிதம்பரம்; சென்ரல் ரோட்டரி சார்பில், முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்விற்கு சங்க தலைவர் ஹரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சாசன செயலாளர் தீபக்குமார், பத்திர எழுத்தர் முத்துக்குமரன், சின்னகாமராஜ் லட்சுமணன், அன்பகம் இல்ல காப்பாளர் சுகுமார், மூத்த உறுப்பினர் பன்னாலால் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகேஸ்வரி சண்முகசுந்தரம், பிரகாஷ் ஆகியோர் முதியோர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை ஷண்முகசுந்தரம் செய்திருந்தார்.சங்க செயலாளர் புகழேந்தி நன்றி கூறினார்