சர்க்கரை ஆலையில் தாசில்தார் ஆய்வு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டு றவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கான வேதி பொருட்கள் இருப்பினை தாசில்தார் ஆய்வு செய்தார். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அடுத்த மாதம் அரவை துவங்க உள்ள நிலையில் வேதி பொருட்களான சல்பர், ஜிப்சம் குடோன் களில் இருப்பு வைத்துள்ளனர். இந்த வேதிப் பொருட்கள் குடோன்களை தாசில்தார் ஷானாஸ் ஆய்வு செய்து, இருப்பு விபரங்களை ஆலை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது ஆர்.ஐ., பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.