உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

வீட்டுமனை பட்டா வழங்க கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

திட்டக்குடி : வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பெண்ணாடம் அடுத்த தீவளூர் காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். ஒரு மாதமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் நேற்று மதியம் 1:30 மணிக்கு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த கூடுதல் தலைமையிடத்து துணை தாசில்தார் அம்பேத்கர், முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதில், வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி தீவளூர் கிராமத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினாார். இதனையேற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு 2:00 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை