உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ் இலக்கிய மன்ற விழா

தமிழ் இலக்கிய மன்ற விழா

சிதம்பரம்; சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் வீனஸ் மழலையர் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் ரூபியால் ராணி, பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் முன்னிலை வகித்தார். மாணவன் பாலசுப்ரமணியனின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நிர்வாக இயக்குநர் அருண், லியோனா அருண் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து முதல் பருவத் தேர்வில் முதல் மூன்றிடம் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவ செல்வங்கள் அக்ஷரன் மற்றும் சிவதர்சன் தொகுத்து வழங்கினர். மாணவி நந்தினி நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை