மேலும் செய்திகள்
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவியர் கைப்பந்து போட்டி
28-Aug-2025
மந்தாரக்குப்பம்: பாஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான கூடை பந்து போட் டியில் தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. 18 வயதிற்குற்பட்ட 75 வது தேசிய அளவிலான 2024-25ம் ஆண்டிற்கான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, ஒடிசா, புதுடில்லி, அசாம், ஹரியானா, ராஜஸ் தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு அணி சார்பில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த என்.எல்.சி., விளையாட்டு பள்ளி முன்னாள் மாணவர் அஸ்வின் உட்பட 12 மாணவர்கள் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிபடுத்தினர். அனைத்து போட்டி முடிவுகளில் தமிழக அணி ஒட்டு மொத்தமாக முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இரண்டாம் இடத்தை பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணி மூன்றாம் இடத்தையும் வென்றது. இதில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி முன்னாள் மாணவர் அஸ்வின் போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாடு அணி சார்பில் போட்டியில் பங்கேற்று சாம்பியன்ஷிப் வெற்றி பெற்ற அஸ்வினை என்.எல்.சி.,பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணன், தலைமையாசிரியர் ஜாக்கப், பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
28-Aug-2025