உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்  

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்  

கடலுார்: கடலுார் மாவட்ட, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உடன் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட தலைவர் அல்லிமுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் பாலமுருகன், பழனிவேல், உதயசங்கர், அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் ராஜாமணி, இருதயராஜ், கிருஷ்ணவேணி, ஞானஜோதி, குப்புசாமி, சீனுவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ