உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் சிப்காட் தமிழ்நாடு வாணிபக் கழக குடோனில், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..டாஸ்மாக் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணை செயலாளர் மோகன்ராஜ், நிர்வாகிகள் கருணாநிதி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட துணைத் தலைவர் சுப்புராயன், ஆளவந்தார், இணை செயலாளர் திருமுருகன் கண்டன உரையாற்றினர். இதில், டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றி இறக்கும் சுமை பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, நிர்வாகிகள் பாரதி, பிரகாஷ், வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி