உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவ அமுதம் மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சாதனை

தவ அமுதம் மெட்ரிக் பள்ளி மாநில அளவில் சாதனை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்தனர்.ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 170 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தீபக், மாணவிகள் தீபிகா, நிதிஷா ஆகிய மூன்று பேரும் தலா 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தனர்.மாணவிகள் சங்கமித்ரா 596 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாமிடம், அபிநயா, பியூலா விண்ணரசி, சுபாஸ்ரீ ஆகியோர் 595 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 21 மாணவ, மாணவிகள் தலா 590க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.165 மாணவ மாணவிகள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் 222 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை