மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
05-Sep-2025
தேனியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கடலுார் சன்னதி தெரு ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்., 5ம் தேதி துவங்கப்பட்டதால் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில், டாக்டர் ஸ்ரீ கிருஷ்ணா தலைமை தாங்கினார். செயலர் நவநீதகிருஷ்ணன், இணை செயலாளர் கலிவரதன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் இமயவரம்பன் வரவேற்றார். ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி உரிமையாள ர்கள் ஆனந்தகுமார் மேத்தா, விஜயகுமார் மேத்தா மற்றும் சன் பிரைட் பிரகாஷ் ஆகியோர் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, அரிசி பெரியாங் குப்பம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றும் 65 ஆசிரியர்களை கவுரவித்து பரிசுகள் வழங்கினர். பாடலீஸ்வரர் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கண்மணி நன்றி கூறினார்.
05-Sep-2025
06-Sep-2025