ஆசிரியர்கள் தபால் ஓட்டுப்பதிவு
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் இருந்து தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, ஜெயப்பிரியா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. அப்போது, ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். அதன்படி, 1,520 ஆசிரியர்கள் காலை, மாலை வேளைகளில் ஓட்டு போட்டனர். இவர்களிடம், தே.மு.தி.க., - பா.ம.க., - த.வா.க., - த.வெ.க., வேட்பாளர்கள் தரப்பில் அரசியல் கட்சி பிரமுகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அவரவர் சின்னங்களை வலியுறுத்தி ஓட்டு சேகரித்தனர்.