மேலும் செய்திகள்
ஐபோன், பணம் பறிப்பு வாலிபர் மீது பெண் புகார்
03-Mar-2025
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய இளம்பெண். கடந்த 2019 ம் ஆண்டு கடலூரில் படித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சுகதேவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, நெருங்கி பழகியுள்ளார். இதனால் கர்ப்பமடைந்த இளம்பெண்ணை சுகதேவ் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள சுகதேவை தேடி வருகின்றனர்.
03-Mar-2025