உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

கடலுார்: கடலுார் அருகே அரசு பஸ் மோதி, பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.கடலுார் அடுத்த சித்திரைப்பேட்டையை சேர்ந்த அன்புவாணன் மகன் அஜேஷ், 24; ஆறுமுகம் மகன் நிரஞ்சன், 22; இருவரும், பைக்கில் வீட்டில் இருந்து கடலுார் நோக்கி சென்றனர். நொச்சிக்காடு நடுத்திட்டு அருகே சென்றபோது, எதிரில் கடலுாரில் இருந்து தியாகவல்லிக்கு சென்ற அரசு டவுன் பஸ் மோதியது. விபத்தில் அஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிரஞ்சன் படுகாயம் அடைந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை