உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வி.சி., கட்சி நிர்வாகி கொலை நெய்வேலி அருகே பதற்றம்

வி.சி., கட்சி நிர்வாகி கொலை நெய்வேலி அருகே பதற்றம்

நெய்வேலி: கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பழனி மகன் பாலாஜி, 30; வி.சி., கட்சியின் மாவட்ட மாணவரணி பொருளாளர். அதே பகுதியைச் சேர்ந்த சங்கு மகன் திருநாவுக்கரசு, 28. இவர்கள் இருவரும், நேற்றிரவு 8:00 மணிக்கு கொள்ளிருப்பு காலனியில் ஏலச்சீட்டு கேட்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கிக் கொண்டனர்.ஆத்திரமடைந்த திருநாவுக்கரசு, மறைத்து வைத்திருந்த கத்தியால் பாலாஜியின் மார்பில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். வி.சி., கட்சி நிர்வாகி கொலை சம்பவத்தால், கொள்ளிருப்பு ஊராட்சியில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ