மேலும் செய்திகள்
புத்தேரி விநாயகருக்கு சதுர்த்தி வழிபாடு
19-Jan-2025
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு தை அமாவாசையொட்டி சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
19-Jan-2025