பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கர்பச்சான் நிவாரணம்
கடலுார்; கடலுார் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயக்குனர் தங்கர் பச்சான் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடலுார் மற்றும் அதன்சுற்றுப்பகுதி கிராமங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டது.புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கடலுார் திடீர்குப்பம் எம்.ஜி.ஆர்., நகர், கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, குண்டு சாலை பகுதிகளில் நேற்று இயக்குனர் தங்கர் பச்சான் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்கள் வழங்கினார்.அப்போது, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாணவரணி கோபிநாத், முன்னாள் மாணவரணி செயலாளர் விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், நகர செயலாளர் ஆனந்த், நகர தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.