கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றம்: சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
கடலுார்; குடியரசு தின விழாவை முன்னிட்டு செம்மங்குப்பம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்துகெண்டார்.கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது:கிராம ஊராட்சியில் சொல்லக்கூடிய வழிமுறைகளை தவறாது நீங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அரசு எந்த முயற்சி எடுத்தாலும் அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு தேவை கிராமங்களின் வளர்ச்சியே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். கிராமத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதை பொருட்களுக்கு ஆட்படாமல், போதை பழக்க வழக்கம் போன்ற செயல்களில் ஈடுபடாமல் நல்லொழுக்கங்களை அவர்களுக்கு தெரிவிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.கழிவறைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த வேண்டும். கிராமத்தை துாய்மையாக பராமரிப்பதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்புடன் செயல்படவேண்டுமென கேட்டுக்கொண்டார். பிளாஸ்டிக்உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர் சரண்யா பயிற்சி கலெக்டர் ஆகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, பார்த்திபன், துணை இயக்குனர் சித்திரைச் செல்வி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுஅலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.