சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
கடலுார்; கடலுாரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் நாகம்மாள் தலைமை தாங்கினார். கற்பகம், ரவிக்குமார், சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜந்தா வரவேற்றார். மாவட்ட செயலாளர் சின்னசாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அரிகிருஷ்ணன், வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறிய சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரிவுப்படுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ராமநாதன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் துளசி நன்றி கூறினார்.