உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்ளிடத்தில் கதவணை; விவசாயிகள் சங்கம் நன்றி

கொள்ளிடத்தில் கதவணை; விவசாயிகள் சங்கம் நன்றி

சிதம்பரம்; கொள்ளிடத்தில் கதவணை அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வினாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: கடலுார் மாவட்டம் ம.ஆதனூர் - மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் 465 கோடியில் கதவணை கட்டுப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கதவணை என்பது இரு மாவட்டத்தின், ஆயிரக்ணக்கான விவசாயிகளின் கனவு திட்டம். ஒவ்வொரு ஆண்டும் உபரி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது, மேலும் கொள்ளிடம் ஆறு, பாசன தேவை மட்டுமின்றி, சுமார் ஒருகோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2014 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 400 கோடியில் கதவணை கட்டப்படும் என அறிவித்தார். அதன்பின், 2019 மார்ச் மாதம் 428 கோடி நிதி ஒதுக்கி, முன்னாள் முதல்வர் பழனி்சாமி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். 6 ஆண்டுகள் கட்டுமான பணிகள் நடந்து, ஒரு சில பணிகளே மீதமுள்ள நிலையில், தற்போது நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே கதவணை திறக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை