மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
12-Sep-2025
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாதர் நல தொண்டு நிறுவனம் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறது என அதன் நிறுவனர் ராஜேந்திரன் கூறினார். இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது: கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்ட மாதர் நல தொண்டு நிறுவனம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நல சேவைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு தொழில் பயிற்சி, சுயதொழில் வாய்ப்பு மற்றும் நிதி உதவி வழங்கி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய செய்துள்ளது. மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவியும், கல்வி உபகரணங்களும் தொடர்ந்து வழங்கி வருகிறது. மது பழக்கத்தின் தீமைகளை எதிர்த்து, மது போதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் கிராமங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதனுடன், இந்நிறுவனம் நடத்தி வரும் மது போதை மறுவாழ்வு மையம் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மருத்துவ சிகிச்சை, ஆலோசனை, மனநலம் வழிகாட்டுதல் மற்றும் தொழில் பயிற்சி வழங்கப்பட்டு, பலர் சமூகத்தில் முன்னேறியுள்ளனர். 'சமூக நலனே எங்கள் குறிக்கோள்' என்ற அடிப்படையில் கிராமப்புற வளர்ச்சி, முதியோர் நல திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேலும் பல இடங்களில் மறுவாழ்வு மையங்களை தொடங்குதல் போன்ற பணிகளை விரிவுபடுத்தும் திட்டங்களுடன் இந்நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாதர் நல தொண்டு நிறுவனம் சமூக சேவையின் வழிகாட்டியாக திகழ்கிறது.
12-Sep-2025