உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 135 மி.மீ., மழை

மாவட்டத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 135 மி.மீ., மழை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை வடக்குத்து பகுதியில் 135 மி.மீ., மழை பதிவாகியது.ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், நேற்று முன்தினம் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை பரவலாக மழை பெய்தது. அதில், வடக்குத்து 135, வானமாதேவி 84, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 47.5, பண்ருட்டி 45, லக்கூர் 29.3, குறிஞ்சிப்பாடி 28, கொத்தவாச்சேரி 18, மேமாத்துார் 17, வேப்பூர் 12, சிதம்பரம் 7.4, புவனகிரி 6, கடலுார் 2.2, கலெக்டர் அலுவலகம் 1.7, பரங்கிப்பேட்டை 1.2, அண்ணாமலை நகர் 1 மி.மீ., மழை பதிவாகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை