கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது
கடலுார் : கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரிப்பால் மீண்டும் வெயில் (100.04) சதமடித்தது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன் தினம், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இருப்பினும் அதற்கு மாறாக நேற்று வெயில் அதிகரித்தது. வெப்ப காற்று வீசியது. நேற்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பதிவானது. வெப்பக்காற்றினால் அவதிப்பட்ட மக்கள் குளிர்பானக்கடைகளில் குவிந்தனர்.