மேலும் செய்திகள்
இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
17-Sep-2025
கடலுார்: கடலுாரில் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் சங்க செயற்குழு, பொதுக்குழு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் என, முப்பெரும் விழா நடந்தது. மாவட்டத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும், கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவி யருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கினார். மாணிக்கம் சங்கக் கொடியேற்றினார். முன்னாள் நீதிபதி ஜெகதீசன், மாவட்ட துணைத் தலைவர் ராஜன், அப்பர், மாவட்ட பொருளாளர் ராஜாமணி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தனர். ஆனந்தசபேசன் உறுதிமொழி வாசித்தார். சமுதாய பொருளாதார தொண்டு மன்ற செயற்குழு உறுப்பினர் ராசு, ஆசைதம்பி, அரிஸ்டோ பள்ளி சேர்மன் சொக்கலிங்கம், சாரங்கபாணி, மூர்த்தி, வஜ்ஜிரவேல், ராமலிங்கம், மாநகர செயலாளர் ராமலிங்கம், ரத்தினசுப்ரமணியன், முருகன், வெற்றிவேல், சதாசிவம், சாரங்கபாணி, ஞானபிரகாசம், சேகர் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
17-Sep-2025