உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகள் மீசையை முறுக்கும் காலம் வந்துவிட்டது; இயற்கை விவசாயி பொன்னுசாமி பரஞ்சோதி பெருமிதம்

விவசாயிகள் மீசையை முறுக்கும் காலம் வந்துவிட்டது; இயற்கை விவசாயி பொன்னுசாமி பரஞ்சோதி பெருமிதம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுன்னார்கோவில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி விழா நடந்தது. குமராட்சி கீழ வன்னியூர் எம்.ஜி.ஆர., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு அமைப்பின் சார்பாக புத்தாக்க பயிற்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, இயற்கை விவசாய விஞ்ஞானி பொன்னுசாமி பரஞ்சோதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: இனி வரும் காலம் விவசாயிகளுக்கான பொற்காலமாகும். அடுத்த தலைமுறையில், விவசாயம் செய்பவர்களே, அடுத்தவர்களுக்கு உணவு அளிக்கும் பெரிய தலைமை பண்போடு விளங்குவார்கள். ஒவ்வொறு விவசாயியும் இனி செல்வந்தர்களாக இருப்பார்கள். இனிமேல் ஒவ்வொறு விவசாயிகளும், மீசையை முறுக்கிவிடும் காலம் வந்துவிட்டது. விவசாயிகள இனி எதற்கும் தயங்க வேண்டாம், அஞ்ச வேண்டாம் என்றார். விவசாய பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் தொழிலலமுறையை அனைத்து விவசாயிகளும் கற்க வேண்டும் எனப் பேசினார்.விழாவில் துறை தலைவர்கள் பூபாலன், செந்தில்குமார் தேவநாதன், நூலகர் நடராஜன், பேராசிரியர்கள் ராமச்சந்திரன் ராஜ்குமார் மற்றும் குமராட்சி கீழ வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். தமிழ் துறை தலைவர் சிற்றரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை