மேலும் செய்திகள்
கோவிலில் திருட்டு 2 பேரிடம் விசாரணை
24-Aug-2025
பஸ்சில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு
31-Aug-2025
புவனகிரி: புவனகிரி சின்னதேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்,45; இவர் புவனகிரி- தெற்கு திட்டை ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் கடைக்குள் சென்று பார்த்த போது, கல்லா பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரத்து 100 ரொக்கம் மற்றும் சில பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
24-Aug-2025
31-Aug-2025