வேப்பூர் கோவிலில் திருட்டு
வேப்பூர் : வேப்பூர் அருகே கோவில் கதவின் பூட்டை உடைத்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் கோமுகி ஆற்றின் குறுக்கே பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, 6,000 ரூபாய் மதிப்பிலான 2 குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.