மேலும் செய்திகள்
சேந்தமங்கலம் அரசு கலை கல்லுாரியில் கம்பன் விழா
24-Mar-2025
கடலுார்; தில்லை கம்பன் கழகம் காலாண்டு கூட்டம், சிதம்பரம் மேலவீதியில் பெல்காம் அனந்தம்மாள் அறக்கட்டளை நிலையத்தில் நடந்தது.தில்லை கம்பன் கழக தலைவரான செந்தில் ஞானவேல் சிட்பண்ட் மேலாண் இயக்குனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அன்பழகன், பார்வை ஒன்றே போதுமே என்ற தலைப்பில் கம்ப ராமாயணத்தில் ராமரின் மேன்மை பற்றி பேசினார். கூட்டத்தில் ராகவன், அருள்பிரகாசம், பிரகாஷ், வழக்கறிஞர் பாஸ்கரன், ராமநாதன், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தில்லை கம்பன் கழக செயலாளர் வேலாயுதம், கல்யாணசுந்தரம், கீர்த்தனா செய்திருந்தனர். பொன்னம்பலம் நன்றி கூறினார்.
24-Mar-2025