மேலும் செய்திகள்
ஆடி வெள்ளி-: அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
02-Aug-2025
கடலுார்: குருங்குடி காத்தாயி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி காத்தாயி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி, காத்தாயி அம்மன், பச்சைவாழி அம்மன், பூங்குறத்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் வடவாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று அம்மன் வீதி புறப்பாடு செய்து, மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.
02-Aug-2025