திருக்குளம் புனரமைப்பு: அமைச்சர் ஆய்வு
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலுக்குச் சொந்தமான திருக்குளம் புனரமைப்பு பணிகளை, அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலுக்குச் சொந்தமான திருக்குளம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு புனரமைப்பு பணிக்காக 2 கட்டங்களாக ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை அமைச்சர் கணேசன், நேற்று காலை ஆய்வு செய்தார். கோவில் செயல் அலுவலர் சிவப்பிரகாசம், தக்கார் தமிழ்ச்செல்வி, நகர மன்ற தலைவர் வெண்ணிலா, துணைச் சேர்மன் பரமகுரு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.