மேலும் செய்திகள்
திருக்குறள் கருத்தரங்கம்
12-Oct-2024
புவனகிரி, : புவனகிரி திருக்குறள் இயக்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.புவனகிரியில் திருக்குறள் இயக்கம் சார்பில் மாதம் தோறும் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த மாதத்திற்கான வகுப்பு நேற்று நடந்தது.திருக்குறள் இயக்கத் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். இயக்க செயலாளர் முருகன் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெடுமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 25வது அதிகாரமான 'அருளுடமை' குறித்து சொற்பொழிவாற்றினார்.பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிகள் நடத்தினர். நிகழ்ச்சியில் புவனகிரி சுற்றுப் பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
12-Oct-2024