உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருக்குறள் திருப்பணி திட்ட பயிற்சி வகுப்பு

 திருக்குறள் திருப்பணி திட்ட பயிற்சி வகுப்பு

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் திருப்பணி திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது. கடலுார், வண்டிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியர் பிரணவமாறன் தலைமை தாங்கினார். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தமிழரசி வரவேற்றார். ஆடிட்டர் குமரகுரு, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் சாந்தகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 'குரல் நெறிக்கல்வி' என்ற தலைப்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் நடராஜன் பயிற்சி அளித்தார். விழாவை தமிழ் சங்க செயலாளர் ஜானகிராஜா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கதிர்வேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை