உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருக்குறள் திருப்பணி திட்டம் பயிற்சி வகுப்பு 

 திருக்குறள் திருப்பணி திட்டம் பயிற்சி வகுப்பு 

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை மற்றும் மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் திருப்பணித் திட்டம் பயிற்சி வகுப்பு நடந்தது. நெல்லிக்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் தலைமை ஆசிரியர் கவி தா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தில்லை சிவகாமசுந்தரி, ஜெயபால், தமிழ் சங்க இணை செயலாளர் ஜெகதீசன் வாழ்த்திப் பேசினர். மாவட்ட கருவூல கணக்கர் ஆதிசங்கரன், திருக்குறளில் நன்றி நவிழ்தல் என்ற தலைப்பில் பேசினார். மாவட்ட தமிழ் சங்க பொருளாளர் ரவி தொகுத்து வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் ஆசிரியர் ஆரியமாலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி