உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருக்குறள் கருத்தரங்கு 

 திருக்குறள் கருத்தரங்கு 

கடலுார்: கடலுார் அரிஸ்டோ ப்பளிக் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே தலைமை தாங்கினார். ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர்கள் உமா, ஜெயஸ்ரீ ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். பேராசிரியர் பத்மநாபன் வாழ்த்தி பேசினார். விழாவில், ஆசிரியர்கள் சிவகாமி, மதுபாலா, ஆஷா, பிரியா, லோகிதா, சித்ரா மற்றும் ராஜஸ்ரீ பங்கேற்றனர். ஆசிரியர் அனுசுயா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ