உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் திருவாசம் முற்றோதல் நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் உள்ள மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் புதுச்சேரி தில்லை சிவபுரத்து அறன் திருக்கூட்டம் அமைப்பினை சேர்ந்த ரமேஷ் சிவனடியார்கள் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசக பாடல்களை பாடினர்.நிகழ்ச்சியில் திருவாசகம் 51 பதிகங்களான சிவபுராணம் தொடங்கி அச்சோ பதிகம் வரை சிவனடியார்கள் பாடினர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவனடியார்களை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம்,மற்றும் சரவணன்,ராஜாராம்,சுப்பரமணியன்,மகாலிங்கம் ஆகியோர் வரவேற்று மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ