உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாநேற்று நடந்தது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து பகலில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவில் பலவேறு வாகனங்கள் சாமி வீதியுலா நடந்து.அதில், 24 ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனம், 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனம், 26-ம் தேதி வெள்ளி பூத வாகனம், 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம் (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகனம், 29 - ம் தேதி தங்க கைலாச வாகனம் 30-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடந்தது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. அன்று இரவு தேரில் இருந்து சாமிகள் இறக்கப்பட்டு, சிவகாமசுந்தரி அம்மாள் சமேத நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆனிதிருமஞ்சன தரிசன நாளான நேற்று, சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பு பகுதியில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.அதனை தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துடன், ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அதனை தெடாந்து பிற்பகல் 2. 50 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டத்தில் இருந்து தீவட்டி முன்னே செல்ல மேள, தாளங்கள் முழங்கிட, வேத மந்திரங்கள் முழங்கிட,தேவாரம், திருவாசகம் பாடிபடி நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னுக்கும், பின்னுக்கும் சென்று நடனமாடியபடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து, சித்சபை பிரவேசம் செய்தனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தொடர்ந்து நாளை தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர்.நிகழ்வையொட்டி, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டனர். மேலும் ஐயப்ப சேவா சங்கம், சோழர் சமூக அறக்கட்டளை மற்றும் சோழ வம்சா விழியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நான்கு வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி