மேலும் செய்திகள்
மின் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
07-Mar-2025
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது.காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜா சூடாமணி ரோட்டு தெருவை சேர்ந்தவர் பிரதீபன், 35: சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று காலை வாக்கிங் சென்றபோது, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் உச்சியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் நிலைய அலுவலர் ( பொறுப்பு) திருஞானசம்பந்தம் தலைமையில் நீர்த்தேக்க தொட்டியில் மீது ஏறி பிரதீபனிடம் சமாதானம் பேசி கீழே அழைத்து வந்தனர்.
07-Mar-2025