உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தொடர் திருட்டு: மூவர் கைது

 தொடர் திருட்டு: மூவர் கைது

குறிஞ்சிப்பாடி: வடலூர், குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதிகளில் கடைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நெய்வேலி சுரங்கம் அருகே 3 நபர்கள் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கள்ளக்குறிச்சி கீரனூர் அஜீத், 25 மற்றும் இரண்டு சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதி கடைகளில் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ