உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாக்டரை தாக்கிய மூவருக்கு வலை

டாக்டரை தாக்கிய மூவருக்கு வலை

பண்ருட்டி: சொத்து பிரச்னையில் டாக்டரை தாக்கிய அக்கா உள்ளிட்ட மூவரை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி அடுத்த விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரவேல் மகன் செல்வவேல்,40; தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது 2 அண்ணன்கள், 2 அக்காள்கள் விசூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை பிரித்து கொள்வது தொடர்பாக கடந்த 28 ம் தேதி ஊர் பஞ்சாயத்து முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் இடையிலேயே செல்வவேல் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அவரது அக்கா செல்வி, அவரது கணவர் மணிகண்டன், அண்ணன் முருகன் மகன் திருசெல்வன் ஆகியோர் சேர்ந்து செல்வவேலை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரி்ல முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து செல்வி உள்ளிட்ட மூவரையும் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி