மேலும் செய்திகள்
லேப்டாப் வழங்கல்
14-Jan-2026
நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் மும்முனை மின்சாரம் வழங்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நெய்வேலி தொகுதி, கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் இருந்து காட்டுக்கூடலுார் வரை ரூ. 80 லட்சம் மதிப்பில் புதிய மின்வழித்தடம் அமைக்கும் பணி முடிவு பெற்றது. இதனையடுத்து அப்பகுதிகளில் மும்முனை மின்சாரம் வழங்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழாவில், தமிழ்நாடு மின்பகிர்மான கழக நிதிநிலை இயக்குநர் பாலகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் சதாசிவம், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் சுகந்தி, நித்தியகுமாரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், அன்பழகன், மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், ஒன்றிய துணை செயலாளர் சுமதி, நந்தகோபால், ஞானசேகர், பாரிவள்ளல், பொன்னம்பலம், சிவமணி, அய்யப்பன், ராஜசேகர், சிவமுருகன், முருகவேல், ரங்கநாதன், செந்தில், இளங்கோ, ஜெயக்குமார், ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர் .
14-Jan-2026