உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  த.மா.கா., புதிய நிர்வாகிகள் நியமனம் 

 த.மா.கா., புதிய நிர்வாகிகள் நியமனம் 

சிதம்பரம்: கடலுார் தெற்கு மாவட்டத்தில், தமிழ்மாநில காங்., கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் பரிந்துரையின் பேரில், கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதில், மாவட்ட பொருளாளராக வசந்தன், மாவட்ட துணை தலைவர்களாக ராமலிங்கம், குணசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர்களாக சீனிவாசன், ஸ்ரீதர், மாவட்ட செயலாளர்களாக இளையகுமரன், உமாவேல், கீதைகுமார், ரமேஷ்குமார், பேரூராட்சி தலைவர்களாக பெண்ணாடம் அம்மா அன்பழகன், ஸ்ரீமுஷ்ணன் செல்வராஜ், வட்டார தலைவர்களாக, மங்கலுார் மேற்கு இளஞ்செழியன், கிழக்கு குணசேகரன், நல்லுார் தெற்கு பூமாலை, காட்டுமன்னார்கோவில் மேற்கு கண்ணதாசன், கிழக்கு துரைசாமி, குமராட்சி மேற்கு கார்த்திக், ஸ்ரீமுஷ்ணன் மேற்கு செல்வம், கிழக்கு ராதாகிருஷ்ணன், திட்டக்குடி நகர தலைவராக ராஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சேகர், சிவக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !