உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு

மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்- 4 தேர்வை 53,867 பேர் எழுதினர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்தது. தேர்வு எழுத கடலுாரில் 19,178 பேர், பண்ருட்டி 8,997, குறிஞ்சிப்பாடி 7,339, சிதம்பரம் 8,468, புவனகிரி 2,633, விருத்தாசலம் 8,272, காட்டுமன்னார்கோவில் 2,815, ஸ்ரீமுஷ்ணம் 1,466, திட்டக்குடி 3,000, வேப்பூர் 1,975 என, மொத்தம் 64,143 பேர் விண்ணப்பித்தனர்.மாவட்டத்தில் 10 தாலுகாவில் 154 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 212 அறைகளில் தேர்வு நடந்தது. கடலுாரில் 15,789 பேர், புவனகிரி 2,171, சிதம்பரம் 7,126, காட்டுமன்னார்கோவில் 2,416, குறிஞ்சிப்பாடி 6,242, பண்ருட்டி 7,638, ஸ்ரீமுஷ்ணம் 1,283, திட்டக்குடி 2,539, வேப்பூர் 1,659, விருத்தாசலம் 7, 004 பேர் என, மாவட்டத்தில் மொத்தம் 53,867 பேர் தேர்வு எழுதினர். 10,276 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வர்கள் காலை 8:00 மணி முதலே தேர்வு மையத்திற்கு வரத் துவங்கினர். ஹால் டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு சோதனை செய்து தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 9:00 மணிக்கு தேர்வு மைய நுழைவு வாயில் மூடப்பட்டது. 9:00 மணிக்கு பிறகு தாமதமாக வந்த ஏராளமானோர் வெளியில் காத்திருந்தனர். கம்மியம்பேட்டை நகராட்சி பள்ளியில் பின்புறமாக ஏறி குதித்து தேர்வர்கள் உள்ளே சென்றதால் திடீர் பரபரப்பு நிலவியது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

விருதையில் தேர்வர்கள் வாக்குவாதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ