உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் டிராக்டர் பேரணி

கடலுாரில் டிராக்டர் பேரணி

கடலுார்; ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலுார் ஜவான் பவன் அருகில் இருந்து டிராக்டர் பேரணி மற்றும் இருசக்கர வாகன அணி வகுப்பு நடந்தது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். இதில், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும். மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். பேரணி கடலுார் அண்ணா பாலம் வழியாக சென்று தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைந்தது. இதையடுத்து, இக்கோரிக்கையை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது, விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன், இந்திய கம்யூ., கட்சி குளோப், மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ